TNPSC Thervupettagam

மோதல் மற்றும் பாதுகாப்பு பற்றிய அறிக்கை

May 12 , 2021 1168 days 585 0
  • சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பானது (IUCN) “உலகமயமாக்கப் பட்ட உலகின் இயற்கைமோதல் மற்றும் பாதுகாப்பு” (Nature in Globalised World : Conflict and Conservation) என அழைக்கப்படும் ஒரு அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
  • இயற்கைக்கும் ஆயுதமேந்திய மோதலுக்கும் இடையேயான ஒரு சிக்கலான தொடர்பினைப் பற்றி இந்த அறிக்கை விவரிக்கிறது.
  • உலகில் மோதல்களால் விளைவிக்கப்படும் முக்கிய அபாயங்களாவன பாதுகாப்பு முயற்சிகளின் சீர்குலைவு, வனவிலங்குகளைக் கொல்லுதல், சுற்றுச்சூழலின் சீரழிவு போன்றவையாகும்.
  • ஆயுதமேந்திய மோதல்கள் பெரும்பாலும் உலகிலுள்ள முக்கிய பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் நிலவுகின்றன.
  • எடுத்துக்காட்டாக இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-சீனா ஆகிய எல்லை சார்ந்த மோதல்கள் இமாலயப் பல்லுயிர்ப் பெருக்கப் பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.
  • இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஒழுங்கற்ற ஆட்சிமுறை போன்றவை, அச்சுறுத்தல் நிலையிலுள்ள 200 இனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.
  • இதில் மிகவும் அருகி வரும் ஒரு இனமான கிழக்கத்திய கொரில்லா போன்ற ஒரு தனித்தன்மை வாய்ந்த இனங்களும் அடங்கும்.
  • ஒரு நாட்டில் விவசாயத்திற்குக் குறைவான நிலப்பரப்பே உள்ளது என்றாலோ (அ) நிலத்தினுடைய வேளாண் உற்பத்தித் திறன் குறைவாக இருந்தாலோ அந்த வகையிலான நாடுகளில் போர்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
  • எப்பொழுதெல்லாம் அதிகளவில் வறட்சி ஏற்பட்டனவோ அப்போதெல்லாம் அடிக்கடி போர்கள் நடைபெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்