பிரான்சு நாட்டின் மிக உயரமான மலையான மான்ட் பிளாங்க் மலையின் உயரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது.
மலையின் சிகரம் ஆனது 4,805.59 மீட்டராக அளவிடப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் அளவிடப்பட்ட அளவை விட 2.22 மீட்டர் குறைவாக உள்ளது.
ஆல்ப்ஸ் மலையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்காணிப்பதற்காக மோன்ட் பிளாங்க் மலைசிகரத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவநிலை அறிவியலாளர்கள் அளவிடுகின்றனர்.
2021 ஆம் ஆண்டில், இந்த மலைச் சிகரத்தின் உயரம் 4,807.81 மீட்டராக பதிவு செய்யப் பட்ட நிலையில் இது 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அளவீட்டை விட சுமார் ஒரு மீட்டர் குறைவாக இருந்தது.
2007 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட 4,810.90 மீட்டர் (15,783 அடி 79 அங்குலம்) என்பதே இதன் மிக அதிக உயரம் ஆகும்.