TNPSC Thervupettagam

மோன்ட் பிளாங்க்

November 26 , 2023 369 days 305 0
  • பிரான்சு நாட்டின் மிக உயரமான மலையான மான்ட் பிளாங்க் மலையின் உயரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது.
  • மலையின் சிகரம் ஆனது 4,805.59 மீட்டராக அளவிடப்பட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டில் அளவிடப்பட்ட அளவை விட 2.22 மீட்டர் குறைவாக உள்ளது.
  • ஆல்ப்ஸ் மலையில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் கண்காணிப்பதற்காக மோன்ட் பிளாங்க் மலைசிகரத்தினை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பருவநிலை அறிவியலாளர்கள் அளவிடுகின்றனர்.
  • 2021 ஆம் ஆண்டில், இந்த மலைச் சிகரத்தின் உயரம் 4,807.81 மீட்டராக பதிவு செய்யப் பட்ட நிலையில் இது 2017 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட அளவீட்டை விட சுமார் ஒரு மீட்டர் குறைவாக இருந்தது.
  • 2007 ஆம் ஆண்டில், பதிவு செய்யப்பட்ட 4,810.90 மீட்டர் (15,783 அடி 79 அங்குலம்) என்பதே இதன் மிக அதிக உயரம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்