TNPSC Thervupettagam

மௌண்ட் ஆடம்ஸ் எரிமலை வெடிப்பு – அமெரிக்கா

October 21 , 2024 8 days 66 0
  • சுமார் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும்பாலும் செயலற்ற நிலையில் இருந்த வாஷிங்டனின் மிகப்பெரிய எரிமலையான மௌண்ட் ஆடம்ஸ் எரிமலையின் நில அதிர்வு நடவடிக்கைகளில் சமீபத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
  • கடந்த 12,000 ஆண்டுகளில் ஆடம்ஸ் எரிமலையானது நான்கு எரிமலைக் குழம்பு வெளியேற்றங்களை உருவாக்கியுள்ளது.
  • பாறை, சாம்பல் மற்றும் பனிக்கட்டிகளால் ஆன எரிமலை சேற்றுப்பாய்வு (லஹார்ஸ்) ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு மிகப்பெரிய அபாயமாக உள்ளது.
  • குறிப்பிடத்தக்க வகையில், ஆடம்ஸ் மலையிலிருந்து வெளிப்பட்ட முந்தைய எரிமலை சேற்றுப்பாய்வு நிகழ்வுகள் ஆனது சுமார் 6,000 மற்றும் 300 ஆண்டுகளுக்கு முன்பு மிக கணிசமான தொலைவுகளுக்குப் பரவின.
  • இந்த சேற்றுப் பாய்வுகளின் சாத்தியமான அபாயங்கள் காரணமாக, மௌண்ட் ஆடம்ஸ் எரிமலை ஒரு "அதிக-அச்சுறுத்தல்" கொண்ட எரிமலையாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்