யமுனையில் அம்மோனியாவின் அளவுகள் அதிகரிப்பு
November 5 , 2020
1486 days
601
- யமுனையாற்றில் அம்மோனியா அளவானது, ஒரு மில்லியனுக்கு 3 பகுதிகள் (parts per million - ppm) என்ற அளவினை எட்டியுள்ளது .
- இந்தியத் தர நிர்ணயப் பணியகத்தின் படி, இது ஏற்றுக் கொள்ளத் தக்க வரம்பான 0.5 ppm என்ற அளவை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும்.
- அம்மோனியா ஒரு நிறமற்ற வாயுவாகும்.
- இது ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜனைக் கொண்டுள்ளது.
- உரங்கள், நெகிழிகள், செயற்கை இழைகள், சாயங்கள் மற்றும் பிற பொருட்களின் உற்பத்தியில் இது ஒரு தொழில்துறை இரசாயனமாக பயன்படுத்தப்படுகிறது.
- கரிமக் கழிவுப் பொருட்களின் சிதைவிலிருந்து சுற்றுச்சூழலில் இயற்கையாகவே அம்மோனியா உருவாகிறது.
Post Views:
601