TNPSC Thervupettagam

யர்ராபுபா பள்ளம்

January 27 , 2020 1637 days 726 0
  • யர்ராபுபா பள்ளம் என்பது மேற்கு ஆஸ்திரேலியாவின் மத்திய மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குறுங்கோள் தாக்கப் பள்ளம் ஆகும்.
  • இது ஏற்கனவே ஒரு குறுங்கோள் தாக்கத்தினால் ஏற்பட்ட பள்ளத்தின் அரிக்கப்பட்ட ஒரு எச்சமாகும்.
  • சமீபத்திய ஆய்வின்படி, ஆஸ்திரேலியாவின் யர்ராபுபா குறுங்கோள் தாக்கப் பள்ளமானது பூமியில் மிகப் பழமையானது ஆகும் (இதன் காலம் 2.229 பில்லியன் ஆண்டுகள் ஆகும்). மேலும் இது பனி யுகத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது.
  • அரிப்பு மற்றும் கண்டத் திட்டு நகர்வின் காரணமாக யர்ராபுபா பள்ளமானது அதன்  வயது மீதான நம்பகமான மதிப்பீட்டு காலம் வரையில்  நிலைத்துள்ளது.
  • மற்ற பழைய குறுங்கோள் பள்ளங்களானவை - தென்னாப்பிரிக்காவின் வ்ரெட்ஃபோர்ட் டோம் (2.023 பில்லியன் ஆண்டுகள் பழமையானது) மற்றும் கனடாவின் சட்பரி பேசின் (1.850 பில்லியன் ஆண்டுகள் பழமையானது) ஆகியவை ஆகும்.
  • தற்போது அறியப்படுகின்ற, துல்லியமாகத் தேதியிடப்பட்டுள்ள பிற குறுங்கோள் தாக்கக் கட்டமைப்புகள் இவை மட்டுமேயாகும்.
  • புவியியல் சார் அறிக்கைகளானவை இத்தகு தாக்கத்திற்கு முன்பு  பூமியானது பனிப் பாறைக் கட்டிகளைக் கொண்டிருந்தது என்பதைக் காட்டுகின்றன. ஆனால் அதன் பிறகு, இந்தப் பனிப்பாறைகள் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக மறைந்து விட்டன.
  • இந்நிகழ்வுகளைக் குறித்து சிர்கான் மற்றும் மோனாசைட் போன்ற தாதுக்களில் “சம இயல்புடைய சுழற்சிகளை” பயன்படுத்தி புவியியலாளர்கள் காலத்தைக் கணித்தனர்.
  • இந்தத் தாதுக்களில் சிறிய அளவு யுரேனியம் உள்ளது. எனினும் இது படிப்படியாக அறியப்பட்ட விகிதத்தில் சிதைவுற்று ஈயமாக மாறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்