சைபீரியாவின் தொலைதூர யாகுடியா பகுதியில் உள்ள உருகி வரும் நிலத்தடி உறை பனியில் கண்டுபிடிக்கப்பட்ட 50,000 ஆண்டுகள் பழமையான குட்டி மாமோத்தின் (கம்பளி யானை) எச்சங்களை ரஷ்ய அறிவியலாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு கண்டுபிடிக்கப்பட்ட நதிப் படுகையினைக் கொண்டு இதற்கு "யானா" என்று அழைக்கப் படுகிறது.
இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட "சிறந்த முறையில் பாதுகாக்கப்பட்ட" மாமோத் சடலம் என்று கூறப்படுகிறது.
முன்னதாக சுமார் 32,000 ஆண்டுகளுக்குக் குறைவான வயதுடையதாகக் கருதப்படும் கொடுவாள் புலியின் பகுதியளவு பதப்படுத்தப்பட்ட ஒரு உடலை அறிவியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், 44,000 ஆண்டுகள் பழமையான ஓநாயின் எச்சங்களும் கண்டறியப்பட்டன.