TNPSC Thervupettagam

யானைகளின் எண்ணிக்கை குறித்த ஒத்திசைவு மதிப்பீடு 2023 அறிக்கை

August 12 , 2023 343 days 198 0
  • சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறித்த ஒரு ஒத்திசைவு மதிப்பீட்டு அறிக்கையின் படி தமிழ்நாட்டின் வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் பதிவாகியுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தில் 2,961 யானைகள் உள்ளன.
  • இந்த எண்ணிக்கையானது, 2017 ஆம் ஆண்டில் 2,761 ஆக பதிவான யானைகளின் எண்ணிக்கையை விட 200 அதிகமாக உள்ளது.
  • 26 வனப் பிரிவுகளில், முதுமலை புலிகள் வளங்காப்பகத்தில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் வளங்காப்பகத்தின் மசினகுடி கோட்டம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகத்தின் ஹாசனூர் கோட்டம் ஆகியவை உள்ளன.
  • ஐந்து யானைகள் வளங்காப்பகங்களில், நீலகிரி கிழக்குத் தொடர்ச்சி மலை யானைகள் வளங்காப்பகத்தில் தான் அதிக எண்ணிக்கையிலான யானைகள் காணப்படுகின்றன.
  • அதனைத் தொடர்ந்து அகத்தியமலை யானைகள் வளங்காப்பகம், நிலாம்பூர் அமைதிப் பள்ளத்தாக்கு - கோவை யானைகள் வளங்காப்பகம் மற்றும் பெரியார் யானைகள் வளங்காப்பகம் ஆகியவை உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பின் படி, மொத்த யானைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே கர்நாடக மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்த யானைகள் எண்ணிக்கையானது 5,914 முதல் 6,877 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் 6,049 ஆக இருந்த கர்நாடக மாநிலத்தின் மொத்த யானைகளின் எண்ணிக்கையானது தற்போது 6,395 ஆக உயர்ந்துள்ளது.
  • இது இந்தியாவில் பதிவான மிக அதிக எண்ணிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்