TNPSC Thervupettagam

யானைகளைக் காப்பாற்ற ‘கஜ யாத்திரை’ பிரச்சாரம்

August 13 , 2017 2716 days 1190 0
  • உலக யானை தினம் - ஆகஸ்ட் 12
  • மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், உலக யானைகள் தினத்தன்று யானைகளைப் பாதுகாக்க ‘கஜ யாத்திரை’ (Gaj Yatra) என்ற பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.
  • இந்த ‘கஜ யாத்திரை’ பேரணியின் பொழுது யானைகள் குறித்த கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகள் உருவாக்கப்படும்.
  • கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களைக் கொண்டு இயற்கை வடிவளவில் இந்த கைவினை வேலைப்பாடுகள் உருவாக்கப்படும்.
  • காட்டு யானைகள் வசிக்கும் 12 மாநிலங்கள் வழியாக இந்த சாலைக் கண்காட்சி நடத்தப்படும்.
  • இந்த பேரணிக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனங்களில் பிரச்சாரக்காரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி பயணிப்பார்கள்.
  • பிரச்சாரத்தின் சின்னம், “காஜீ” என்கிற யானை பொம்மை ஆகும். இந்தச் சின்னத்தினை மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிட்டது.
  • 2017 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பினை மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. இந்தியா-வங்காளதேச நாடுகளுக்கு இடையிலான எல்லையைக் கடந்த யானைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.
  • இந்தியா-வங்காளதேசம் இடையே யானைகள் கடந்து செல்ல ‘Elephant Corridors’ எனப்படும் ‘யானைகள் வழித்தடங்கள்’’ உள்ளன. இதைப்பற்றிய ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டது.
    • ஆவணத்தின் தலைப்பு : கடந்து செல்லும் உரிமை (Right of Passage).
  • பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விகள் மற்றும் பதில்கள் அடிப்படையில் யானைகள் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
    • தொகுப்பின் பெயர் : ‘Glimpses of Initiatives Taken for Elephant Conservation in India (2012-2017)
    • வெளியிட்டோர்:
      • சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு மையம் (ENVIS Centre)
      • இயற்கைக்கான உலகளாவிய நிதியம் - இந்தியா (WWF-India)
      • சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் திட்டப் பிரிவு – (Project Elephant Division, MoEFCC)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்