மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், உலக யானைகள் தினத்தன்று யானைகளைப் பாதுகாக்க ‘கஜ யாத்திரை’ (Gaj Yatra) என்ற பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளது.
இந்த ‘கஜ யாத்திரை’ பேரணியின் பொழுது யானைகள் குறித்த கலை மற்றும் கைவினை வேலைப்பாடுகள் உருவாக்கப்படும்.
கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களைக் கொண்டு இயற்கை வடிவளவில் இந்த கைவினை வேலைப்பாடுகள் உருவாக்கப்படும்.
காட்டு யானைகள் வசிக்கும் 12 மாநிலங்கள் வழியாக இந்த சாலைக் கண்காட்சி நடத்தப்படும்.
இந்த பேரணிக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வாகனங்களில் பிரச்சாரக்காரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி பயணிப்பார்கள்.
பிரச்சாரத்தின் சின்னம், “காஜீ” என்கிற யானை பொம்மை ஆகும். இந்தச் சின்னத்தினை மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியிட்டது.
2017 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய யானைகள் கணக்கெடுப்பினை மத்திய சுற்றுக்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. இந்தியா-வங்காளதேச நாடுகளுக்கு இடையிலான எல்லையைக் கடந்த யானைகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கை விவரிக்கிறது.
இந்தியா-வங்காளதேசம் இடையே யானைகள் கடந்து செல்ல ‘Elephant Corridors’ எனப்படும் ‘யானைகள் வழித்தடங்கள்’’ உள்ளன. இதைப்பற்றிய ஆவணம் ஒன்று வெளியிடப்பட்டது.
ஆவணத்தின் தலைப்பு : கடந்து செல்லும் உரிமை (Right of Passage).
பாராளுமன்றத்தில் எழுந்த கேள்விகள் மற்றும் பதில்கள் அடிப்படையில் யானைகள் பாதுகாப்புக்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
தொகுப்பின் பெயர் : ‘Glimpses of Initiatives Taken for Elephant Conservation in India (2012-2017)
வெளியிட்டோர்:
சுற்றுச்சூழல் தகவல் அமைப்பு மையம் (ENVIS Centre)
இயற்கைக்கான உலகளாவிய நிதியம் - இந்தியா (WWF-India)
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் யானைகள் திட்டப் பிரிவு – (Project Elephant Division, MoEFCC)