லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு நாடானது யானைக்கால் நோயினை (LF) முற்றிலும் ஒழித்துள்ளது.
இது பாதிக்கப்பட்ட சமூகங்களை முடக்கி, அவர்கள் மீது குறிப்பிடத்தக்க சமூக மற்றும் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.
கண்ணிமையரிப்பு நோயினை (ட்ரக்கோமா) ஒழித்ததை தொடர்ந்து, கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த நாட்டில் ஒழிக்கப்பட்ட இரண்டாவது புறக்கணிக்கப்பட்ட வெப்ப மண்டல நோய் (NTD) இதுவாகும்.
2023 ஆம் ஆண்டில் யானைக்கால் நோயினை (LF) ஒழித்த வங்காளதேசத்திற்குப் அடுத்த படியாக, தற்போது இந்த நோயினை ஒழித்த இரண்டாவது நாடாக லாவோ குடியரசு உள்ளது.
பத்தொன்பது நாடுகள் யானைக்கால் நோயினை (LF) ஒழித்துள்ளன.