பரேலி நகரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் - இந்தியக் கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் (ICAR-IVRI) ஆனது, சமீபத்தில் யானை எண்டோதெலியோட்ரோபிக் ஹெர்பெஸ்வைரசின் (EEHV) உள் வகைகளின் துல்லியமான நிலையை கண்டறிந்துள்ளதோடு அதன் உள் வகைகள் இந்தியாவில் உள்ள ஆசிய யானைகள் மத்தியில் பரவி இருப்பதையும் கண்டறிந்துள்ளது.
ஒரு வகை ஹெர்பெஸ் வைரசான EEHV என்பது இளம் ஆசிய யானைகளில் மிகவும் ஒரு ஆபத்தான இரத்தக்கசிவு நோயை ஏற்படுத்தும்.
இது ஹெர்பெஸ்விரிடே குடும்பத்தினைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்படும் ஈரிழைகள் கொண்ட டிஎன்ஏ வைரஸ் ஆகும்.
பெரும்பாலான யானைகளும் இந்த வைரசினைப் பரப்புகின்றன.
EEHV வைரஸ் செயல்பாடு தூண்டப்பட்டால், யானையின் உடலினுள் அதிகளவில் இரத்தப் போக்கு (வெளிப்படையாக தெரிவதில்லை) ஏற்பட்டு உயிரிழக்கும்.
இந்த நோய் என்பது பொதுவாக 28 முதல் 35 மணிநேரம் என்ற குறுகிய காலப்போக்கில் உயிரினைப் பறிக்கும் அளவிற்கு ஆபத்தானது.