TNPSC Thervupettagam

யாவுண்டே பிரகடனம்

March 16 , 2024 125 days 221 0
  • அதிக எண்ணிக்கையில் மலேரியா பாதிப்பு கொண்ட ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் சமீபத்தில் மலேரியா உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் யாவுண்டே பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.
  • உலகளவில், கோவிட்-19 பெருந்தொற்றிற்கு முந்தையக் காலத்துடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டில் மலேரியா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் 233 மில்லியனாக இருந்த மொத்தப் பாதிப்புகள் ஆனது 249 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • ஆப்பிரிக்க நாடானது, மலேரியா பாதிப்புகள் அதிகம் கொண்ட மலேரியா நோயின் மையப் பகுதியாக உள்ளது.
  • இது உலகளாவிய மலேரியா பாதிப்புகளில் 94 சதவிகிதமும், 2022 ஆம் ஆண்டில் 580,000 உயிரிழப்புகளுடன் உலகளாவிய மலேரியா தொடர்பான உயிரிழப்புகளில் சுமார் 95 சதவிகிதப் பங்கினையும் கொண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்