ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று (ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர நிதியம் / United Nations International Children’s Emergency Fund - UNICEF) யுனிசெஃப் அமைப்பை உருவாக்கியது.
1953 ஆம் ஆண்டில், யுனிசெஃப் அமைப்பானது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர அமைப்பாக மாறியது.
இது வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் ஆகியோருக்கு மனிதாபிமான மற்றும் வளர்ச்சிக்கான உதவிகளை வழங்குகின்றது.
இதன் தலைமையகமானது நியூயார்க் நகரில் அமைந்துள்ளது.
இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் மேம்பாட்டுக் குழு மற்றும் அதன் செயற்குழுவின் உறுப்பு அமைப்புகளில் ஒன்றாக விளங்குகின்றது.