TNPSC Thervupettagam

யுனெஸ்கோ/எமிர் ஜாபர் அல் அகமது அல் ஜாபர் அல் சாபாக் விருது

December 8 , 2018 2098 days 571 0
  • மாற்றுத் திறனாளிகளின் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக யுனெஸ்கோ/எமிர் ஜாபர் அல் அகமது அல் ஜாபர் அல் சாபாக் விருதானது,
    • வாஸ்கர் பட்டாசார்ஜி - வங்க தேசத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கான வழக்குரைஞர்
    • டென்செண்ட் - சீனாவைச் சேர்ந்த தனியார் துறை தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • மாற்றுத் திறன் குறித்த தகவல் மற்றும் அறிவை அணுகுவதற்காக தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயன்பாடுகளின் மூலம் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தியதற்கு தலைசிறந்த பங்களிப்பை இவர்கள் ஏற்படுத்தியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது 2018/2019 மற்றும் 2020/2021 ஆகிய இரண்டு ஆண்டு காலங்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் இவ்விருதானது,
    • தனிநபர் மற்றும்
    • நிறுவனம் ஆகிய பிரிவுகளில் சமமாகப் பிரித்து வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டு தனிநபர் பிரிவில் வாஸ்கர் பட்டாசார்ஜிக்கும், நிறுவனங்களுக்கான பிரிவில் டென்சென்ட் நிறுவனத்திற்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இது குவைத் நாட்டினால் மறைந்த ஆட்சியாளரான ஜாபர் அல் அகமது அல் சாபாக் என்பவரது நினைவாக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்