TNPSC Thervupettagam

யுனெஸ்கோவின் 33வது கூட்டம்

September 27 , 2021 1029 days 517 0
  • யுனெஸ்கோ அமைப்பின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் என்ற  திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புச் சபையின் 33வது கூட்டமானது நைஜீரியாவிலுள்ள அபுஜா எனுமிடத்தில் கலப்பு முறையில் நடைபெற்றது.
  • இந்தக் கூட்டமானது ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • 21 நாடுகளிலுள்ள 20 புதிய இடங்கள் உலக உயிர்க்கோளக் காப்பக கட்டமைப்பில் சேர்க்கப் பட்டன.
  • இது உயிர்க்கோளக் காப்பகங்களின் எண்ணிக்கையை 727 ஆக (131 நாடுகளில்) உயர்த்தியது.
  • லெசோதோ (மாட்செங் உயிர்க்கோளக் காப்பகம்), லிபியா (அஷாஃபீன் உயிர்க்கோளக் காப்பகம்) மற்றும் சவுதி அரேபியா (ஜீசூர் ஃபாரசன் உயிர்க்கோளக் காப்பகம்) ஆகிய இடங்கள் முதல்முறையாக இப்பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளன.
  • யுனெஸ்கோ அமைப்பின் உயிர்க்கோளக் காப்பகங்கள் தற்போது புவியின் நிலப் பரப்பில் 5%க்கும் மேல் பரவி உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்