TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பின் ஆசிய-பசிபிக் விருதுகள் 2023

December 30 , 2023 184 days 232 0
  • இந்தியாவின் ஆறு பாரம்பரியம் சார்ந்த திட்டங்களானது கலாச்சாரப் பாரம்பரிய பாதுகாப்பிற்கான மதிப்புமிக்க யுனெஸ்கோ ஆசிய-பசிபிக் விருதுகளைப் பெற்று உள்ளன.
  • அமிர்தசரஸில் உள்ள ராம்பாக் நுழைவு வாயிலானது தனிச்சிறப்பு கொண்டவை என்ற பிரிவில் விருதினைப் பெற்றுள்ளது.
  • இந்தியாவிலுள்ள ஹரியானாவின் குருகிராமில் உள்ள எபிபானி தேவாலயம், மும்பையில் உள்ள டேவிட் சாசூன் நூலகம் மற்றும் வாசிப்பு அறை; மற்றும் புது டெல்லியில் உள்ள பிகானேர் இல்லம் ஆகியவை சிறந்த தகுதி கொண்டவை என்ற விருதினைப் பெற்றுள்ளன.
  • கேரளாவில் உள்ள குன்னமங்கலம் பகவதி கோயிலில் உள்ள கர்ணிகார மண்டபம் மற்றும் பஞ்சாபில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தின் பிபால் ஹவேலி ஆகியவை அதன் நிலையான மேம்பாட்டிற்காக இந்த விருதினைப் பெற்றுள்ளன.
  • விருது வழங்கப்பட்ட 12 தளங்களில், ஐந்து சீனாவையும், ஆறு இந்தியாவையும், ஒன்று நேபாளத்தையும் சேர்ந்தவை ஆகும்.
  • நடுவர் மன்றமானது 8 நாடுகளிலிருந்து மொத்தம் 48 திட்டங்களை மதிப்பீடு செய்து, இந்த மதிப்புமிக்க விருதிற்காக 12 திட்டங்களைத் தேர்வு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்