TNPSC Thervupettagam

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா

July 5 , 2023 382 days 230 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு (UNESCO) ஆனது ஜூலை மாதத்தில் அமெரிக்கா மீண்டும் இணைய உள்ளதாக அறிவித்தது.
  • யுனெஸ்கோ அமைப்பானது, இஸ்ரேன் நாட்டிற்கு எதிரான சார்பினைக் கொண்டு உள்ளதாகக் குற்றம் சாட்டி, பின்பு அந்த முகமையினை விட்டு இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்காவும் விலகிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அது மீண்டும் இணைய உள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளின் மத்தியில், இந்த அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான நடவடிக்கை மீதான ஒரு வாக்கெடுப்பானது  மேற்கொள்ளப் படும்.
  • யுனெஸ்கோவின் கொள்கை வகுக்கும் செயல்முறையில், அமெரிக்கா விட்டுச் சென்ற இடைவெளியை சீனா ஆக்கிரமித்ததன் காரணமாக, இந்த அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவதற்கான முடிவானது மேற்கொள்ளப் பட்டது.
  • முன்னதாக 1984 ஆம் ஆண்டில் ரொனால்டு ரீகன் ஆட்சியின் கீழ் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா 2003 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சியின் கீழ் மீண்டும் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்