TNPSC Thervupettagam

யுனெஸ்கோ – இதழியலாளர்களுக்கான சர்வதேச மன்றம்

May 21 , 2018 2380 days 759 0
  • தெற்காசிய நாடுகளின் குடிமக்கள், மே 2017 முதல் ஏப்ரல் 2018 வரையிலான காலகட்டத்தில் 97 முறைக்கும் மேலாக இணைய வசதி தடையைச் சந்தித்துள்ளதாக சமீபத்தில் யுனெஸ்கோவினால் வெளியிடப்பட்ட இதழியலாளர்களுக்கான சர்வதேச மன்றத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
  • இந்தியா மட்டும் 82 முறையும், பாகிஸ்தான் 12 முறையும், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் ஒருமுறையும் இந்த இணைய வசதி தடையை சந்தித்துள்ளன.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் நாட்டில் அமல்படுத்தப்பட்ட இணைய வசதித் தடையில் பாதியளவை சந்தித்திருக்கிறது.
  • உலக முழுவதும் இணைய வசதித் தடை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுக் காட்டும் இந்த அறிக்கை, ஊடகத் துறையின் சுதந்திரம் மற்றும் வெளிப்படுத்தும் தன்மை (Expressions) ஆகியவற்றிற்கு ஒரு பிரச்சினையாகவும் இந்த தடை உள்ளது எனவும் தெரிவிக்கிறது.
  • பெரும்பாலான இத்தடைகள் வன்முறையுடன் கூடிய பொதுமக்களின் எதிர்ப்பைத் தடுப்பதற்கான முன்கூட்டிய செயல்பாடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்