தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவினுடைய (National Council of Educational Research and Training-NCERT) முன்னாள் இயக்குநரான, பேராசிரியர்S ராஜ்புட் அவர்களை மத்திய அரசானது யுனெஸ்கோவினுடைய நிர்வாகக் குழுவிற்கான இந்தியாவின் பிரதிநிதியாக நியமனம் செய்துள்ளது.
2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரைக்கான யுனெஸ்கோவினுடைய நிர்வாகிகள் குழுவினுடைய உறுப்பினர் பதவிக்கு தேர்தல் ஆனது 2017 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற்றது.
2017 ஆம் ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 14 வரை நடைபெற்ற யுனெஸ்கோ அமைப்பின் 39-வது பொதுக் கருத்தரங்கு சந்திப்பின் போது குரூப் IV பிரிவில் இந்தியா 162 வாக்குகளைப் பெற்று இத்தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளது.
நிர்வாகக் குழு
58 இடங்களைக் கொண்டுள்ள யுனெஸ்கோவினுடைய நிர்வாகக் குழுவின் பதவிக் காலம் 4 ஆண்டுகளாகும்.
யுனெஸ்கோவின் முக்கிய அரசியலமைப்பு அங்கங்களுள் (Constitutional organs) ஒன்றான நிர்வாகக் குழுவானது பொதுக் கருத்தரங்கு அவையினால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
இது யுனெஸ்கோவினுடைய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் அனை த்திற்கும் பொறுப்புடைய முக்கிய அங்க அமைப்பாகும்.
இக்குழுவானது யுனெஸ்கோவினுடைய செயல்பாடுகள் மற்றும் யுனெஸ்கோவினுடைய பட்ஜெட் மதிப்பீடுகளை (budget estimates) ஆராய்கின்றது.