TNPSC Thervupettagam

யுனெஸ்கோ பத்திரிக்கை சுதந்திரப் பரிசு - 2018

April 27 , 2018 2405 days 775 0
  • யுனெஸ்கோ அமைப்பின் 2018 ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கைச் சுதந்திர பரிசு (World Press Freedom Prize) ஷாவ்கான் (Shawkan) எனப் பிரபலமாக அறியப்படும் எகிப்திய புகைப்பட இதழியலாளரான மஷ்மூத் அபு ஜயீத்திற்கு (Mahmoud Abu Zaid) வழங்கப்பட்ட உள்ளது.
  • ஐநாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவினால் இந்த விருது 1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.
  • கொலம்பியா நாட்டின் இதழியலாளரான குய்லேர்மோ கனோ இஸாஜா வினை (Guillermo Cano Isaza) கவுரவப்படுத்துவதற்காக யுனெஸ்கோ அமைப்பு இவ்விருதினை தோற்றுவித்தது.
  • உலகின் எந்தவொரும் பகுதியிலும், குறிப்பாக ஆபத்தை எதிர்கொள்கின்ற வேளைகளில், பத்திரிக்கைச் சுதந்திரத்தின் மேம்பாட்டிற்காகவும் பத்திரிக்கைச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்காகவும் மாபெரும் பங்களிப்பினை வழங்குகின்ற நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் நபர்களை கவுரவிப்பதற்காக இவ்விருது யுனெஸ்கோ அமைப்பினால் வழங்கப்படுகின்றது.
  • கொலம்பியாவின் பகோடாவில் உள்ள எல் எஸ்பெக்டடாரில் அமைந்துள்ள தன் பத்திரிக்கை அலுவலகத்தின் முன் கொலம்பியாவின் உள்நாட்டுப் பிரச்சனைகளை எதிர்த்து பத்திரிக்கை பிரசுரித்ததால் கொலம்பியாவைச் சேர்ந்த இதழியலாளரான குய்லேர்மோ கனோ இஸாஜா 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்