இராஜஸ்தான் மாநிலத்தின் இசை, கலை & கைவினை வடிவங்கள் மற்றும் பிற புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியங்களை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ மற்றும் ராஜஸ்தான் அரசாங்கம் ஆகியவை இணைந்துள்ளன.
இது ராஜஸ்தானின் வளமிக்க புலப்படாத கலாச்சாரப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக அடிப்படையிலான பொறுப்பான சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு கூட்டு ஒப்பந்தம் ஆகும்.
இந்தத் திட்டம் ஜோத்பூர், பார்மர், ஜெய்சால்மர் மற்றும் பிகானிர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.