ஜப்பானில் உள்ள இயற்பியலாளர்கள் இதுவரையில் முன்னர் அறியப்படாத யுரேனிய ஐசோடோப்பைக் கண்டுபிடித்துள்ளனர்.
யுரேனியம்-241 எனப்படும் இந்தப் புதிய ஐசோடோப்பு ஆனது 92 புரோட்டான்களையும் 149 நியூட்ரான்களையும் கொண்டுள்ளது.
இந்தப் புதிய நியூட்ரான் நிறைந்த யுரேனியம் ஐசோடோப்பின் இந்தக் கண்டுபிடிப்பு ஆனது 1979 ஆம் ஆண்டிற்கு பிறகு மேற்கொள்ளப் பட்டுள்ள இவ்வகையில் முதலாவது கண்டுபிடிப்பாகும்.
கோட்பாட்டுக் கணக்கீடுகள் இது 40 நிமிடங்கள் என்ற அரை ஆயுட்காலத்தினைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன.
யுரேனியம், தனிம வரிசை அட்டவணையில் உள்ள “ஆக்டினைடுகள்” எனப்படும் தனிமங்களின் வகுப்பில் உள்ளது.
அனைத்து ஆக்டினைடுகளும் கதிரியக்கத்தன்மை கொண்டவை, ஆனால் யுரேனியம் ஆனது அதிக கதிரியக்கத் தன்மை கொண்ட நான்கு தனிமங்களில் ஒன்றாகும்.