TNPSC Thervupettagam

யூதர்கள் தேசச் சட்டம்

July 26 , 2018 2218 days 1125 0
  • இஸ்ரேல் பாராளுமன்றம் நெசெட் (knesset), இஸ்ரேலினை யூதர்களுக்கான தேசிய வாசஸ்தலமாக முதன்முறையாக உறுதிப்படுத்தும் சர்ச்சைக்குரிய தேச-அரச மசோதாவினை நெசெட்டின் அரசியலமைப்பு முறை சார்ந்த அடிப்படைச் சட்டத்தில் (யூதர்கள் தேச சட்டம்) சேர்த்துள்ளது.
  • மேலும் இச்சட்டம் ஜெருசலத்தினை இஸ்ரேலின் தலைநகராகவும் ஹெப்ரூ நாட்காட்டியை நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாகவும் அறிவித்துள்ளது.
  • இம்மசோதாவில் உள்ள ஒரு உட்கூறு, அரபு மொழியினை அதிகாரப்பூர்வ நிலையிலிருந்து சிறப்பு மொழி (Special) என்ற நிலைக்கு தரம் இறக்குகிறது.
  • தற்பொழுது, இஸ்ரேலில் உள்ள மொத்த மக்கட் தொகையில்5% யூதர்கள் ஆவர். அரேபியர்கள் இஸ்ரேல் மக்கட்தொகையில் 20% உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்