ஆஸ்கர் விருது பெற்ற நடிகையான நடாலி போர்ட்மேனுக்கு 2018-ஆம் ஆண்டிற்கான ஜேனிஸிஸ் பரிசு (Genesis Prize) வழங்கப்பட்டுள்ளது.
பாலின சமத்துவம், வறுமை ஒழிப்பு, சிறுகடனுதவி, விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற பல்வேறு சமூக காரணிகளில் அவர் கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் இஸ்ரேலிய மற்றும் யூதக் கலாச்சார வேர்களில் அவர்கொண்ட ஆழமான பிணைப்பு போன்றவற்றினை அங்கீகரிக்கும் விதத்தில் இப்பரிசு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இப்பரிசை பெறும் 5வது நபர் மற்றும் முதல் பெண்மணி நடாலி போர்ட்மேன் ஆவார்.
ஜேனிஸிஸ் பரிசு யூத நோபல் பரிசு எனவும் அழைக்கப்படும்.
2014 ஆம் ஆண்டு ஜேனிஸிஸ் தோற்றுவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய பிரதம அலுவலகம், ஜேனிசிஸ் விருது அறக்கட்டளை, யூத நிறுவனத்தின் தலைவர் அலுவலகம் ஆகியவற்றிற்கிடையேயான கூட்டிணைவு மூலம் இப்பரிசு வழங்கப்படுகிறது.