TNPSC Thervupettagam

யூரியா மானியத் திட்டம்

May 8 , 2018 2267 days 994 0
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, யூரியா மானியத் திட்டத்தை 2017லிருந்து 2020 வரை தொடரும் உரத்துறையின் முன்மொழிவிற்கு அனுமதி வழங்கியதோடு உர மானியத் தொகையை வழங்குவதற்கு நேரடி பயன் பரிமாற்றத்தின் (Direct Benefit Transfer – DBT) செயலாக்கத்திற்கும் அனுமதி வழங்கியுள்ளது. மானியம் தொடர்பான இந்த முன்மொழிவு மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் உரங்கள் துறையினால் முன்னனுப்பப்பட்டது (Forwarded) குறிப்பிடத்தக்கது.
  • இந்த முடிவு 2020 வரை யூரியா விலையில் எந்தவொரு அதிகரிப்பும் இருக்காது என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • யூரியா மானியத் திட்டத்தை தொடர்வது என்பது யூரியா உற்பத்தியாளர்களுக்கு மானியத்திற்கான தொகையை சரியான நேரத்தில் வழங்குதலை உறுதி செய்யும். இது சட்ட ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட விலையில் (Statutory Controlled price) யூரியாவை சரியான நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும். உரத்துறையில் நேரடி பயன் பரிமாற்றத்தின் செயலாக்கம் என்பது விவசாயமல்லா செயல்பாடுகளுக்கு மானிய விலையிலான யூரியாவின் பயன்பாட்டை குறைக்கும்.
  • உரங்கள் துறையானது (Department of Fertilizers - DoF) நாடு முழுவதும் உரத் துறையில் (Fertiliser sector) நேரடி பயன் பரிமாற்றத்தினை செயல்படுத்தும் திட்டத்தில் இருக்கின்றது.
  • DBT ஆனது, விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கும் உர நிறுவனங்களுக்கு 100% மானியத்தை வழங்கும்.
  • உரத்துறையில் DBTயின் செயலாக்கம் ஆனது மற்றபிற திட்டங்களுக்கு செயலாக்கம் செய்யப்பட்ட DBT யிலிருந்து, சற்று வேறுபட்டே காணப்படும்.
  • இதன் கீழ் விற்பனையாளரால் பயனாளிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்ட பின்னர் மானியமானது (பயனாளிகளுக்கு வழங்கப்படுவதற்குப் பதிலாக) உரநிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • யூரியா மானியம் ஆனது வரவு செலவு திட்டத்தின் ஆதரவுடன் (Budgetry Support) மத்திய அரசால் முழுவதும் நிதியளிக்கப்படும் மத்திய அரசுத் திட்டம் ஆகும். இந்த மானியத்தில் இறக்குமதி செய்யப்பட்ட யூரியாவிற்கான மானியமும் அடங்கும். இறக்குமதியை நோக்கிய இந்த மானியமானது மதிப்பிடப்பட்ட தேவை மற்றும் யூரியாவின் உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றிற்கிடையேயான இடைவெளியின் பாலமாக செயல்படுகிறது. நாடு முழுவதும் யூரியாவின் போக்குவரத்திற்கான சரக்கு மானியமும் (Freight subsidy) இந்த மானியத்துடன் அடங்கும்.
  • தற்போது, இந்தியாவில் 31 யூரியா உற்பத்திக் கூடங்கள் உள்ளன. இவற்றில் 28 யூரியா உற்பத்திக் கூடங்கள் இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொள்கின்றன. மற்ற 3 யூரியா உற்பத்திக் கூடங்கள் நாப்தாவை (Naphtha) எரிபொருளாகக் கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்