TNPSC Thervupettagam

யூரேசிய நீர்நாய் – மகாராஷ்டிரா

November 14 , 2024 11 days 75 0
  • புனே மாவட்டத்தில் உள்ள இந்தாபூரில் இந்தப் பகுதியில் இதற்கு முன் பதிவு செய்யப் படாத ஓர் அரிய வகை யூரேசிய நீர்நாய் மீட்கப்பட்டது.
  • யூரேசிய நீர்நாய் இந்தியாவில் அரிதாகவே காணப்படுகிறது.
  • அவை முதன்மையாக இமயமலை அடிவாரங்கள், வட கிழக்குப் பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் ஆங்காங்கே சில பகுதிகளில் மட்டுமே காணப் பட்டன.
  • நீர் மாசுபாடு மற்றும் வாழ்விட இடையூறுகளால் மிக அதிகம் பாதிக்கப்படும் இவை தனித்துக் காணப் படும் என்பதோடு இவை முதன்மையாக இரவு நேரங்களில் இயங்கும் உயிரினங்கள் ஆகும்.
  • நதி சுற்றுச்சூழல் அமைப்புகளில் உயர் மட்ட வேட்டையாடி இனங்களாக உள்ள இவை மீன்களின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்தவும் சுற்றுச்சூழல் சமநிலையை நன்கு பேணவும் உதவுகின்றன.
  • யூரேசிய நீர்நாய் (லூட்ரா லூட்ரா) என்பது இந்தியாவில் காணப்படும் மூன்று நீர்நாய் இனங்களில் ஒன்றாகும்.
  • மற்ற இரண்டு இனங்கள் - மென்மையான தோல் கொண்ட நீர்நாய் (லுடரோகேல் பெர்ஸ்பிசில்லாட்டா) மற்றும் சிறிய நகம் கொண்ட நீர்நாய் (ஆனிக்ஸ் சிநேரியஸ்) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்