மேற்குத் தொடர்ச்சி மலையின் மேகமலை – மூணார் நிலப்பரப்பில் புதிய கவச வால் பாம்பு இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அவை சுமார் 3,000 முதல் 6,400 அடி உயரத்தில் உள்ள காடுகளிலும் தேயிலைத் தோட்டங்களுக்கு அருகிலும் காணப்படுகின்றன.
யூரோபெல்டிஸ் காடோமகுலாட்டா தமிழ்நாட்டில் உள்ள மேகமலை புலிகள் வளங்காப்பகம், பெரியார் புலிகள் வளங்காப்பகம் மற்றும் கேரளாவின் மூணார் பகுதியில் உள்ள யெல்லப்பட்டி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப் படுவதாக அறியப் படுகிறது.