TNPSC Thervupettagam

ரஃபேல் போர் விமானங்களின் சேர்க்கை

September 14 , 2020 1530 days 672 0
  • இந்திய விமானப்படை செப்டம்பர் 10, 2020 அன்று அம்பாலாவின் விமானப்படை நிலையத்தில் ரஃபேல் விமானத்தை முறையாகச் சேர்த்துள்ளது.
  • இந்திய விமானப் படையைச் சேர்ந்த முதல் ஐந்து ரஃபேல் விமானங்களானது 2020 ஜூலை 27 அன்று பிரான்சிலிருந்து அம்பாலாவின் விமானப் படை நிலையத்திற்கு வந்தது.
  • இது தற்போது முதல் ‘தங்க அம்புகள்’ என்றும் அழைக்கப்படும் 17 ஸ்குட்ரான் என்ற போர்க்கப்பலின் ஒரு பகுதியாகும்.

மற்ற தகவல்கள்

  • இராணுவ ரீதியாக, ரஃபேல் என்றால் “நெருப்பின் வெடிப்பு” (burst of fire) என்று பொருள்.
  • இது டஸ்ஸால்ட் நிறுவனத்தால் ஆம்னிரோல் (omni role - பல பணிகள் செய்யக் கூடியது) விமானம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • இந்த 4.5 தலைமுறை ஜெட் விமானமானது, ஒலியின் வேகத்தை விட (1.8 மாக் அளவு) இருமடங்காக அதிக வேகத்துடன் செல்லக் கூடியது.
  • இது SCALP உடன் வருகிறது, SCALP என்பது 300 கி.மீ.க்கு மேல் வரம்பைக் கொண்ட ஒரு விண்-தரை வகை ஏவுகணை ஆகும்.
  • இதை 70 கி.மீ வரம்பிற்குள், பதுங்கு குழி வகை போன்ற ஒரு கடினப்படுத்தப்பட்ட வகை இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்தலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்