TNPSC Thervupettagam

ரக்தமிச்சைஸ் மும்பா

October 3 , 2021 1023 days 431 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தினைச் சேர்ந்த நான்கு அறிவியலாளர்கள் குழு ஒன்று, பார்வையற்ற நன்னீர் வாழ் (ஈல்) விலாங்கு மீன் இனத்தினைக் கண்டறிந்து உள்ளது.
  • இந்தப் புதிய  விலாங்கு மீன் வகையானது மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்த விலாங்கு மீன் இனமானது மண்ணிற்கு அடியில் புதைந்து வாழும் பார்வையற்ற நன்னீர் வாழ் மீன் இனம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
  • மகாராஷ்டிரா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட முதல் இனம் இதுவாகும்.
  • இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் நினைவாக ரக்தமிச்சைஸ் மும்பா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இது இந்திய நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட ரக்தமிச்சின் இனத்தைச் சேர்ந்த 5வது இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்