மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகமானது பாரம்பரிய இனிப்பு வகையான ரசகுல்லாவிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அதற்கான புவிசார் குறியீட்டை (geographical indication-GI) மேற்கு வங்கத்திற்கு வழங்கியுள்ளது.
இதற்குமுன், புவிசார் குறியீட்டைப் பெறுவதற்கு ரசகுல்லா எங்கு தோன்றியது என்பது தொடர்பாக மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸா மாநிலங்களுக்கிடையே இடையே போட்டி நிலவி வந்தது.
புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ், ரசகுல்லாவிற்கான காப்புரிமை மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
ரசகுல்லாவை கண்டுபிடித்தவர் நோபின் சந்திரதாஸ் ஆவார். இவர் பெங்காலின் ஓர் குறிப்பிடத்தக்க இனிப்பக விற்பன்னர் மற்றும் தொழில்முனைவோர் ஆவார்.
இதற்கு முன் இதே வருடத்தில் மேற்கு வங்கத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த பொருட்களான இரு அரிசி வகைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.அவையாவன,