TNPSC Thervupettagam

ரஞ்சி கோப்பை 2017- விதர்பா அணி

January 1 , 2018 2391 days 793 0
  • இந்தூரின் ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி இரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது.
  • 2017 வரை, அதன் 84 வருட கால இரஞ்சிக் கோப்பை வரலாற்றில் விதர்பா அணி இதுவரை ஒரு முறை கூட இதனை வென்றதில்லை. கடந்த வருடம், இதனை முதன் முறையாக குஜராத் அணி வென்றது.

ரஞ்சி கோப்பை

  • இரஞ்சிக் கோப்பை என்பது இந்தியாவிற்குள் பிராந்திய மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளுக்கு இடையேயான உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியாகும்.
  • இந்தப் போட்டி, ரஞ்சி என்றும் அறியப்படும் இரஞ்சித் சிங்ஜி என்ற இந்திய கிரிக்கெட் வீரர் முதன் முறையாக சர்வதேச அளவில் இங்கிலாந்து அணிக்காவும், சுசக்ஸ் என்ற அணிக்காகவும் விளையாடியதற்குப் பின் பெயரிடப்பட்டது.
  • 1958-59 முதல் 1972-73 வரையிலான தொடர்ச்சியான 15 வெற்றிகளை சேர்த்து மொத்தம் 41 வெற்றிகளோடு பம்பாய் இந்த போட்டியில் அதிக முறை வென்ற முதல் அணியாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்