TNPSC Thervupettagam

ரயில்வேயின் தேனீ திட்டம்

July 10 , 2019 1839 days 653 0
  • வடகிழக்கு எல்லை ரயில்வேக்கு 2018 – 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய ரயில்வே துறையின் சிறந்த புத்தாக்கத்திற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இது ரயில் தடங்களில் யானைகள் விபத்துகளைச் சந்திப்பதில் இருந்து காப்பாற்ற “தேனீ திட்டம்” எனும் தனித்துவமான திட்டத்தை செயல்படுத்தியது.
  • இது காட்டு யானைகளை ரயில் தடங்களில் இருந்து விலக்கி வைக்க தேனீக் கூட்டங்களின் ரீங்காரங்களை உருவாக்கும் ஒரு அமைப்பாகும்.
வடகிழக்கு எல்லை ரயில்வே
  • வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தலைமையகமானது அஸ்ஸாமின் தலைநகரமான கவுகாத்தியில் உள்ள மாலிகாயோனில் உள்ளது.
  • இது முழு வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு வங்காளம், பீஹார் ஆகியவற்றின் சில பகுதிகளில் ரயில்களை இயக்குவதற்குப் பொறுப்புடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்