கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ஹெஜ்ஜாலா’ (Hejjala) என்ற கிராமத்தில் 32 சதுர கிலோமீட்டர் பரப்பில் இந்தியாவின் முதல் ரயில்வே பேரிடர்களுக்கான மேலாண்மை மையம் (Railway Disaster management Centre) 2018ல் அமைக்கப்பட இருக்கிறது.
தொடர்ந்து நடைபெறும் ரயில் விபத்துக்களுக்குத் தக்க பதில் அளிக்கும் விதத்தில் மீட்புப் பணிகளின் தர மேம்பாட்டினை முடுக்கிவிடுவதற்கு இது பயன்படும்.
இங்கு ரயில்வே விபத்துக்களை ஆராய்வதற்கான மெய்நிகர் தோற்ற மையமும் (Virtual reality centre) ஏற்படுத்தப்பட இருக்கிறது.
வகுப்பறையில் மீட்புப்பணிகள் மருத்துவ உதவி வழங்கல் போன்றவற்றிற்கு அதிநவீனத் தொழில்நுட்பரீதியிலான பயிற்சிகளும் வழங்கப்பட இருக்கின்றன. இவை பல்வேறு செயல்முறை மாதிரிகள் மூலம் விளக்கப்பட இருக்கிறது.
ரயில்வே விபத்து தொடர்பான செயல்முறை மாதிரி வகுப்புகளும் நடத்தப்பட இருக்கின்றன.