TNPSC Thervupettagam

ரவீணா தண்டன் - சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளம்பரத் தூதர்

August 25 , 2018 2187 days 612 0
  • மும்பை நகரைச் சேர்ந்த சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் (SGNP) விளம்பரத் தூதுவராக பாலிவுட் நடிகை ரவீணா தண்டன்-ஐ மகாராஷ்டிரா அரசு நியமித்துள்ளது.
  • அவர் சுற்றுச்சூழல் உணர்வுள்ள குடிமகனாக இருப்பதால் சக குடிமக்களுக்கு விழிப்புணர்வைப் பரப்புவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இது மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். முன்னர் இது போரிவளி தேசிய பூங்கா என்றழைக்கப்பட்டது. 1996ல் தற்போதைய பெயரான சஞ்சய் காந்தி என்ற பெயருக்கு மாற்றப்பட்டது.
  • மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாக இது குறிப்பிடத்தக்கது மற்றும் உலகில் மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வருகையுடைய  பூங்காக்களில் ஒன்றாகவும் உள்ளது.
  • 2000 ஆண்டுகள் பழமையான சில 160 குடைவரைக் குகைகள் இந்த பூங்காவின் உள்ளே அமைந்துள்ளன மற்றும் இது ஒரு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்