TNPSC Thervupettagam

ரஷ்யாவின் இணைப்பு நடவடிக்கைக்கு எதிரான தீர்மானம்

October 9 , 2022 653 days 300 0
  • ரஷ்யாவின் இணைப்பு நடவடிக்கைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) தீர்மானத்திற்கு வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்தது.
  • இது மாஸ்கோவின் "சட்டவிரோத வாக்கெடுப்பிற்கு" கண்டனம் தெரிவித்ததோடு, நான்கு உக்ரேனிய நாட்டுப் பிரதேசங்களை ரஷ்யா இணைத்த நடவடிக்கையானது செல்லுபடியாகாது என்று அறிவித்தது.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் மீது ரஷ்யா தனது மறுப்பு அதிகாரத்தினை (வீட்டோ) பயன்படுத்தி அதனைத் தடுத்தது.
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினரான ரஷ்யா தனது மறுப்பு அதிகாரத்தினைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தினை ரத்து செய்ததால் சபையினால் அந்தத் தீர்மானத்தை ஏற்க முடியவில்லை.
  • சபையின் 15 உறுப்பினர்களில் 10 உறுப்பினர் நாடுகள் அத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
  • சீனா, காபோன், இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் அதில் வாக்களிப்பதைத் தவிர்த்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்