ரஷ்யாவின் கேஸ்புரோமிடமிருந்து மலிவான விலை திரவ இயற்கை எரிவாயு
June 12 , 2018 2362 days 674 0
ரஷ்யாவின் கேஸ்புரோமிடமிருந்து (Gazprom) இந்தியா இது நாள் வரையிலான தனது முதல் மலிவான திரவ இயற்கை எரிவாயுவை பெற்றிருக்கிறது.
இந்த LNG (Liquefied Natural Gas) சரக்கு, இந்தியாவின் பழமையான மற்றும் மிகப்பெரிய LNG வழங்குபவரான கத்தார் நாட்டிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் விலையை விட5 அமெரிக்க டாலர் மலிவான விலையில் ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு (mmBtu) 7 அமெரிக்க டாலர் என்ற விலையில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விலை ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் LNG-ஐ விட ஒரு மில்லியன் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டிற்கு 1 முதல்5 அமெரிக்க டாலர் அளவிற்கு மலிவானதாகும்.
தற்சமயம் இயற்கை எரிவாயுவிற்கான தேவையில் பாதியளவிற்கு இறக்குமதி மூலம் தீர்க்கப்படுகிறது. இந்த வகையில் இந்தியா LNG இறக்குமதியில் நான்காவது மிகப்பெரிய இறக்குமதியாளராகும்.
இயற்கை எரிவாயு என்பது மின்சாரத் தயாரிப்பிற்கும் உரத் தயாரிப்பிற்கும் எஃகு தயாரிப்பிற்கும் உபயோகிக்கப்படும் ஒரு முக்கிய உள்ளீடாகும்.