TNPSC Thervupettagam

ரஷ்யாவின் தெருவிற்கு கூடங்குளம் பெயர்

November 17 , 2018 2105 days 602 0
  • ரஷ்யாவின் வோல்கோடான்ஸ்க் நகரத்தின் ஒரு வீதிக்கு கூடங்குளம் தெரு என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தப் பாதையானது கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான உபகரணங்களைத் தயார் செய்யும் அட்டாமஷ் ஆலைக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையமானது
    • ரஷ்யாவின் ரோசாட்டம் அரசு அணுசக்திக் கழகம் மற்றும்
    • இந்திய அணுசக்திக் கழக நிறுவனம் (NPCIL - Nuclear Power Corporation of India Limited) ஆகியவற்றால் இணைந்து கட்டப்பட்டது.
  • இது ரோசாட்டம் அரசு அணுசக்தி நிறுவனத்தின் இயந்திர தயாரிப்புப் பிரிவான அடோமெனிகோமஷ் என்பதின் துணை நிறுவனம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்