TNPSC Thervupettagam

ரஷ்யாவின் விண்வெளி நிலையம்

April 26 , 2021 1219 days 931 0
  • ரஷ்யா தனது சொந்த விண்வெளி நிலையம் ஒன்றினை அமைத்து 2030 ஆம் ஆண்டிற்குள் அதனை விண்வெளியின் சுற்றுப் பாதையில் நிலைநாட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது.
  • சர்வதேச விண்வெளி நிலையத் திட்டத்திலிருந்து வெளியேறும் முடிவை ரஷ்யா ஆலோசித்து வருகிறது.
  • அமெரிக்க நிறுவனமான ஸ்பேஸ் X நிறுவனத்தின் வெற்றிகரமான முதல் விண்வெளி திட்டத்திற்குப் பிறகு, கடந்த ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் தனது திட்டத்தின் முன்னுரிமையை ரஷ்யா இழந்து உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம்

  • இந்நிலையம் 1998 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஈடுபாடும் அடங்கும்.
  • சர்வதேச விண்வெளி நிலையமானது (International Space Station – ISS) புவியின் தாழ்மட்ட சுற்றுப் பாதையில் அமைந்த (low Earth orbit) ஒரு மாதிரி விண்வெளி நிலையமாகும் (செயற்கையாக வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்ட துணைக் கோள்).
  • ISS ஆனது வான்-உயிரியல், வானியல், எரிகல் பற்றிய அறிவியல், இயற்பியல் மற்றும் இதர பிரிவுகளில் அறிவியல் குறித்த சோதனைகள் மேற்கொள்ளப் படுவதற்கான ஒரு விண்வெளி சூழல் சார்ந்த ஆய்வகமாக செயல்படுகிறது.
  • ISS ஆனது புவியை 93 நிமிடங்களில் சுற்றி வந்து ஒரு நாளைக்கு 15.5 சுற்றுகளை நிறைவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்