December 3 , 2022
724 days
434
- ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் காணப்படும் நிலத்தடி உறைபனியில் இருந்து சேகரிக்கப் பட்ட பண்டைய கால மாதிரிகளை ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
- அவர்கள் 13 புதிய நோய்க் கிருமிகளுக்குப் புத்துயிர் அளித்து அவற்றினை வகைப் படுத்தி அவற்றினை "ஜாம்பி வைரஸ்கள்" என்று கூறுகின்றனர்.
- அவை பல ஆயிரம் வருடங்கள் உறைந்த நிலத்தில் சிக்கியிருந்தப் போதிலும் அவை தொற்றுத் திறன் கொண்டதாக இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
- இந்த 13 வைரஸ்களில், பண்டோரா வைரஸ் யெடோமா என அழைக்கப்படும் பழமையான வைரசானது 48,500 ஆண்டுகள் பழமையானது என அறியப்படுகிறது.
- இந்த வைரஸ் 2013 ஆம் ஆண்டில் இதே குழுவினால் கண்டுபிடிக்கப்பட்ட 30,000 ஆண்டுகள் பழமையான வைரஸ் என்ற அதன் முந்தைய சாதனையை முறியடித்தது.
Post Views:
434