TNPSC Thervupettagam

ரஷ்யாவுடன் OPEC+ விநியோக நிறுத்த ஒப்பந்தம்

March 12 , 2020 1627 days 563 0
  • கொரோனா வைரஸ் பாதிப்பைச் சமாளிப்பதற்கு வேண்டி எண்ணெய் உற்பத்திக் குறைப்பிற்கு ரஷ்யா ஆதரவளிக்க மறுத்ததைத் தொடர்ந்து OPEC (எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு  - Organization of the Petroleum Exporting Countries) மற்றும் ரஷ்யா இடையேயான மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
  • OPEC அமைப்பானது தனது சொந்த உற்பத்தியில் உள்ள அனைத்து வரம்புகளையும் (சலுகைகளையும்) நீக்கி இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளது.
  • OPEC+ என்பது கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களின் கூட்டணியைக் குறிக்கின்றது. இவர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் எண்ணெய்ச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் விநியோகத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
  • OPEC+ அமைப்பில் அசர்பைஜான், பஹ்ரைன், புருனே, கஜகஸ்தான், மலேசியா, மெக்ஸிகோ, ஓமன், ரஷ்யா, தெற்கு சூடான் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் உள்ளன.
  • உலகின் முன்னணியில் உள்ள எண்ணெய் ஏற்றுமதியாளர் நாடான சவுதி அரேபியா இந்தச் சரிவிற்குப் பிறகு, ஏப்ரல் மாதத்தில் அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவிற்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்