TNPSC Thervupettagam

ரஷ்யா - இந்தியா இடையிலான வர்த்தகம்

November 4 , 2022 752 days 375 0
  • இந்திய வர்த்தகத்தில் கடந்த ஆண்டு 25வது இடத்தில் இருந்த ரஷ்யா தற்போது இந்தியாவின் ஏழாவது பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்கு இடையில் ரஷ்யா உடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 18.2 பில்லியன் டாலராக உயர்ந்தது.
  • ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்குப் பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் பிற எரிபொருள் பொருட்கள் மற்றும் உரங்கள், காபி மற்றும் தேநீர், மசாலாப் பொருட்கள் மற்றும் விலங்கு மற்றும் காய்கறி சார்ந்த கொழுப்புப் பொருட்கள் போன்ற நுகர் பொருட்களுடன் சேர்த்து இறக்குமதி செய்யப் படுகின்றன.
  • ஆனால் 2022 ஆம் ஆண்டில் இதுவரையில், இருதரப்பு வர்த்தகத்தில் உரங்கள் மற்றும் எரிபொருள் ஆகியவை மட்டுமே 91%க்கும் அதிகமாக வர்த்தகம் செய்யப்பட்டன.
  • செப்டம்பர் மாதத்தில், ரஷ்யா இந்தியாவின் இரண்டாவது பெரிய கச்சா எண்ணெய் வழங்கீட்டு நாடாக மாறியது.
  • இந்தியா தனது பெட்ரோலியத் தேவையில் 85 சதவீதத்தினைப் பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்துள்ளது.
  • இந்தியா உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோர் நாடாக விளங்குகிறது.
  • ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ரஷ்யாவிலிருந்து மேற்கொள்ளப் படும் இறக்குமதியானது ஆண்டிற்கு 500% அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்