TNPSC Thervupettagam

ரஷ்ய இணைப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம்

October 19 , 2022 643 days 306 0
  • 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், ரஷ்யாவின் சட்ட விரோத இணைப்பிற்குக் கண்டனம் தெரிவிக்கும் வரைவு தீர்மானத்தின் மீதான அல்பேனியாவின் தீர்மானத்திற்கு வாக்களிக்கப்பட்டது.
  • இந்தத் தீர்மானத்திற்கு இரகசிய வாக்கெடுப்பு மூலம் வாக்களிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரியிருந்தது.
  • இந்தியா உட்பட 107 ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகள் நிராகரித்ததை அடுத்து, மாஸ்கோவின் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
  • இரகசிய வாக்கெடுப்பிற்கான ரஷ்யாவின் அழைப்பிற்கு ஆதரவாக 13 நாடுகள் மட்டுமே வாக்களித்த நிலையில் 39 நாடுகள் இதில் வாக்களிக்கவில்லை.
  • ரஷ்யாவும் சீனாவும் வாக்களிக்காத நாடுகளில் அடங்கும்.
  • இதற்கிடையில், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பினை இந்தியா இதுவரை கண்டிக்கவில்லை என்பதோடு அரசுமுறை மற்றும் பேச்சுவார்த்தை மூலம் இந்த நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்