2033 ஆம் ஆண்டிற்குள் ரஷ்ய நாட்டின் சுற்றுப்பாதை விண்வெளி நிலையத்தினை உருவாக்குவதற்கான திட்டத்திற்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் முதலில் அறிவியல் மற்றும் ஆற்றல் வழங்கீட்டுத் தொகுதிகள் 2027 ஆம் ஆண்டில் அனுப்பப்படும்.
உலக முனையம், நுழைவாயில் மற்றும் விண்வெளித் தளப் பெட்டகம் ஆகிய மூன்று முக்கிய தொகுதிகள் 2030 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும்.
மற்ற இரண்டு முக்கியத் தொகுதிகள் 2033 ஆம் ஆண்டிற்குள் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முழுமையாகச் செயல்பாட்டில் உள்ள இரண்டு விண்வெளி நிலையங்கள் உள்ளன - சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) மற்றும் சீனாவின் டியாங்காங் விண்வெளி நிலையம் (TSS) ஆகியவை ஆகும்.