TNPSC Thervupettagam
April 14 , 2019 1958 days 554 0
  • ரஷ்யாவின் உயரிய விருதான “செயிண்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தல்” என்ற பட்டமானது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இந்தப் பட்டமானது இரஷ்யாவின் துறவிகளின் ஆதரவாளர் மற்றும் ஏசுவின் முதல் தூதரான ஆன்ட்ரு என்ற துறவியைக் கௌரவிப்பதற்காக சார் பீட்டர் தி கிரேட் என்பவரால் 1698 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
  • இது 1998 ஆம் ஆண்டில் இரஷ்யாவின் உயரிய விருதாக மீண்டும் ஏற்படுத்தப்படும் வரை USSR ஆட்சியில் ஒழிக்கப்பட்டது.
  • இந்தியா மற்றும் இரஷ்யா ஆகிய நாடுகளின் மக்களுக்கிடையே நட்பு ரீதியிலான உறவை மேம்படுத்தியதற்காகவும் இரு நாடுகளுக்கிடையே ஒரு சிறப்பு வாய்ந்த மற்றும் பயன் தரக்கூடிய உத்திசார் பங்களிப்பை ஊக்குவித்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டு அவர் கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்