TNPSC Thervupettagam

ராக்கிகர்ஹி ஹரப்பா தளம்

May 11 , 2022 801 days 489 0
  • பழமையான சிந்து சமவெளித் தளங்களில் ஒன்றான ஹரியானாவின் ராகிகர்ஹி கிராமத்தில் இந்தியத் தொல்லியல் துறை முக்கியமானச் சுவடுகளைக் கண்டறிந்து உள்ளது.
  • தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இப்பகுதியில் செம்பு மற்றும் தங்கம் ஆகியவற்றால் ஆன பொருட்களோடு சேர்த்து, தொல்பொருள்கள், மணிகள், மோதிப் எனப்படும் முத்திரையிடப்பட்ட எழுத்து வடிவம் மற்றும் ஹரப்பன் எழுத்து வடிவங்கள் & யானை உருவங்களுடன் கூடிய கூரைகள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர்.
  • இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் பல அடுக்குமாடி வீடுகள், பாதைகள் மற்றும் வடிகால் அமைப்பு ஆகியவற்றின் கட்டமைப்பு இங்கு இருந்ததை வெளிப் படுத்தியுள்ளன.
  • இந்த அகழாய்வுத் தளத்தில் உள்ள ஏழு குவியல்களுள் மூன்றில் செம்பு மற்றும் தங்க நகைகள், டெரகோட்டா (சுடுமண்) பொம்மைகள் மற்றும் ஆயிரக்கணக்கான களி மண் பானைகள் மற்றும் முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த இடமானது,  5000 ஆண்டுகள் பழமையான நகைகள் தயாரிக்கும் இடமாக இருந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்