ராஜஸ்தானின் தேகானாவில் லித்தியம் இருப்பு
May 10 , 2023
437 days
235
- இந்தியப் புவியியல் ஆய்வு மையமானது இந்தியாவின் இரண்டாவது லித்தியம் இருப்பு மையத்தை ராஜஸ்தானின் தேகானாவில் கண்டறிந்துள்ளது.
- சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டதை விட தேகானாவில் லித்தியம் இருப்பு அதிகமாக உள்ளது.
- ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் முதல் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப் பட்டது.
- இங்கு உள்ள 5.9 மில்லியன் டன்கள் லித்தியத்தின் மதிப்பு 410 பில்லியன் டாலர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.
- தென் அமெரிக்காவின் லித்தியம் முக்கோண பகுதியான அர்ஜென்டினா, பொலிவியா மற்றும் சிலி ஆகிய இடங்களில் மிக அதிகமான லித்தியம் இருப்புக்கள் குவிந்துள்ளன.
- லித்தியம் சுத்திகரிப்பில் 75% சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
Post Views:
235