முதன்முதலாக நீர் வளத்திற்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இணைய தளமானது ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.
இது அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் மற்றும் ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள கால்வாய்களில் உள்ள நீரின் அளவு பற்றிய நிகழ்நேரத் தகவல்களை வழங்கும்.
இந்த இணைய தளம் ஆனது திறன்மிகு நீர் மேலாண்மைக்கு உதவுவதோடு, வெள்ளம் மற்றும் வறட்சி ஆகியவை குறித்து கணிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் இருப்பு பற்றியத் தகவல்களைப் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வரும் ஓர் அமைப்பினை உருவாக்கிய முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும்.
இந்த இணைய தளமானது, 805 அணைகளின் முழுத் தரவுகளையும், 242 அணைகளின் தினசரித் தரவுகளையும், 88 அணைகளின் நேரடித் தரவுகளையும் வழங்கும்.