ராஜிவ் மஹரிஷி - புதிய இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலகத் தலைவர்
September 25 , 2017 2726 days 975 0
ராஜிவ் மஹரிஷி புதிய இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CAG
இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை அலுவலகம் ஓர் அரசியலமைப்பு சட்ட அலுவலகம் (Constitutional body).
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கணக்குகளை தணிக்கை செய்வது இதன் முதன்மையான அரசியலமைப்பு பணியாகும்.
CAG இன் நியமனம் மற்றும் பதவிப் பிரமாண உறுதிமொழி முன்மொழிவு குடியரசுத் தலைவரால் மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் இவரது நீக்கம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீக்கமுறைப் போன்றது ஆகும்.
பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை
இவர் இந்திய கருவூலத்தின் பாதுகாவலர் எனவும் அழைக்கப்படுவார்.