TNPSC Thervupettagam

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு

May 21 , 2022 922 days 605 0
  • உச்சநீதிமன்றம் முழுமையான நீதியை வழங்குவதற்காக வேண்டி அதன் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தி, A.G. பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டது.
  • மின்கலன்களை வாங்கியதற்காக வேண்டி 1991 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட போது பேரறிவாளனுக்கு வயது 19 ஆகும்.
  • அவை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்ற ஒரு பெல்ட் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டதாகும்
  • நீதிபதி L. நாகேஸ்வர ராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வானது, இந்த வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவை வழங்கிய ஒரு அறிவுரைக்கு ஆளுநர் கட்டாயமாக கட்டுப்பட வேண்டும் என்று கூறியது.
  • இத்தீர்ப்பை வழங்கும் போது, "முழுமையான நீதியை" வழங்குவதற்கு வேண்டி நிலுவையில் உள்ள எந்தவொரு வழக்கு அல்லது விவகாரத்தில் அதன் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்கும் 142வது சரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியது.
  • 1980 ஆம் ஆண்டின் மாரு ராம் வழக்கானது மாநில அமைச்சரவையால் வழங்கப் படும் அறிவுரை மற்றும் ஆலோசனையினை ஆளுநர் ஏற்று நடக்க வேண்டும்.
  • ஒருவேளை அந்த அறிவுரை ஏற்றுக் கொள்ளப் படவில்லையெனில், ஆளுநர் அதனைத் திரும்பப் பரிசீலிக்கக் கோரி திரும்பவும் மாநிலத்திற்கே அனுப்ப வேண்டும்.

142வது சரத்தின் கீழ் தீர்ப்பளிக்கப்பட்ட மற்ற வழக்குகள்

  • போபால் விஷவாயுக் கசிவு துயர சம்பவம் குறித்த வழக்கின் போது, ​​பாதிக்கப் பட்டவர்களுக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவைச் சேர்ந்த யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இராமர் கோவில் வழக்கின் தீர்ப்பில் அந்தக் கோவில் நிலத்தைப் பிரிக்க மறுத்து, அதற்குப் பதிலாக அந்த நிலத்தின் சர்ச்சைக்குரியப் பகுதியான 2.77 ஏக்கர் நிலத்தை மொத்தமாக இந்து சமூகத்தினைச் சேர்ந்தப் பிரிவினருக்கு வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்